வீட்டுத் தோட்டத்தில் 10 லட்சம் தவளைகள் கொண்ட ராணுவத்தை உருவாக்கியிருப்பதாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் பிரபலமாகி உள்ளது.
95 நாட்களுக்கு முன்பு தான் பத்து லட்சத்து 40 ஆயிரம் தவளை முட்டைகளை தோட்டத்தில் உள்ள நீர்நிலையில் விட்டதாகவும், அதிலிருந்து தற்போது 10 லட்சம் தவளைக்குஞ்சுகளை கொண்ட ராணுவம் உருவாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பெருகிவரும் தவளைப்படையால் தோட்டத்தில் உள்ள புல்வெளிகள் மறைந்து எங்குபார்த்தாலும் தவளைக் குஞ்சுகளாக காட்சியளிக்கின்றன.