வேலையே வேண்டாம்; ராஜினாமா செய்துவிட்டு கழுதை பண்ணை தொடங்கிய ஐடி ஊழியர்

மங்களூரு: இன்றைய காலத்தில் வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. அதிலும் படித்த படிப்புக்கான வேலை குதிரை கொம்பாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், இன்ஜினியரிங் முடித்து விட்டு, தான் பார்த்து வந்த வேலையை இளைஞர் ஒருவர் ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:மங்களூருவை சேர்ந்தவர் நிவாஸ் கவுடா. ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடாவுக்கு கழுதை பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது வேலையை நிவாஸ் கவுடா ராஜினாமா செய்துள்ளார்.தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார்.இதுகுறித்து பண்ணை உரிமையாளர் நிவாஸ் கவுடா கூறியதாவது:கடந்த 2020ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையமாகும்.  தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் ரூ.42 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.