ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை பைத்தியமாக்கி வருகிறது. இந்த வைரல் ஆப்டிகல் இல்யூஷன் படம், உங்களை இருக்கும் நிறத்தை புறக்கணித்து, இல்லாத நிறத்தை இருக்கிறது என்று நம்பும்படி உங்களை ஏமாற்றுகிறது.
பெரும்பாலான ஆப்டிகல் இல்யூஷன் படம் மனித மூளையைக் குழப்புவதன் மூலம் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷனும் அந்த வரிசையில் உங்களை குழப்பும் படம்தான். கீழே உள்ள படத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரிகளைப் பார்த்துவிட்டு, நீங்கள் பார்த்தது என்ன கலர் என்று கூறுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஜப்பானிய உளவியலாளர் ஒருவர் உலகிற்கு கலர் இல்யூஷனும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளார். கலர் இல்யூஷன் படங்களில் பெரும்பாலும் உங்கள் மூளை உங்களுக்கு பொய் சொல்கிறது என்றே கூறலாம்.
ஜப்பானில் உள்ள ரிட்சுமெய்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அகியோஷி கிடாவோகா சமீபத்தில் ஸ்ட்ராபெர்ரி படத்தைப் பகிர்ந்துள்ளார். இது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் யதார்த்தத்திலிருந்து விலகி ஒரு நம்பும்படியான தோற்றத்தை உருவாக்குகின்றன. உதாரணமாக, இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் ஸ்ட்ராபெர்ரிகள் படத்தில் உள்ள கலர் இல்லை.
நீங்கள் பார்க்கும் இந்த ஸ்ட்ராபெர்ரிகளின் கலர் என்ன? என்று சொல்லுங்கள். நீங்கள் பார்பது நீலமா அல்லது சிவப்பு நிறமா? அல்லது சுற்றிலும் நீல நிற ஒளியுடன் சிவப்பு நிற சாயல் கொண்டதா? என்று கூறுங்கள்.
இந்த ஸ்ட்ராபெர்ரியின் கலர் என்ன என்பதை உங்கள் மூளை தவறாக சொல்லலாம். உண்மையில் இந்த கலர் இல்யூஷனில் என்ன நடந்தது என்பதை பாருங்கள்.
சமூக ஊடகப் பயனர்கள் பலரும், ஸ்ட்ராபெர்ரி சிவப்பு நிறம் இல்லை என்றாலும் ஸ்ட்ராபெர்ரி இருப்பதைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.
ஒரு சமூக ஊடகப் பயனர், நிச்சயமாக சிவப்பு பிக்சல்கள் உள்ளது என்று கூறுகிறார்.
இல்லை, ஒரு ஹாட் சாம்பல் நிறம் இருப்பதாக மற்றொரு சமூக ஊடகப் பயனர் கூறுகிறார். இருப்பினும், கிடாவோகா இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். ஸ்ட்ராபெர்ரிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும், இருப்பினும் அனைத்து பிக்சல்களும் சியான் அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளன.
சிவப்பு ஸ்ட்ராபெர்ரி பார்த்தீர்கள் என்றால், cell.com இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நம் மூளை ஒரு பொருளைப் பார்க்கும்போதெல்லாம் அதன் படங்களை நீண்ட நேரம் கவனிக்கிறாது. நீங்கள் சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளைப் பார்க்கப் பழகிவிட்டதால், உங்கள் மூளையும் சாம்பல் நிற ஸ்ட்ராபெர்ரிகளில் கொஞ்சம் சிவப்பு நிறத்தைக் காணும்.
சில அன்றாடப் பொருட்கள் பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புடையவை. சில பொருட்களின் நிறம் மனதில் சேமிக்கப்பட்டு இருக்கும். அவற்றின் வழக்கமான நிறத்தைப் பற்றிய நமது அறிவு தாக்கத்தை எற்படுத்தும் என்று நடத்தை ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நிகழ்வு ‘கார்டிகல் கலரிங்-இன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது மூளையின் ஆக்ஸிபிடல் லோபில் காணப்படும் விஷுவல் கார்டெக்ஸ் வழியாக நிகழ்கிறது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூனோ கிம் விளக்கினார், “ஒளி மூலத்தின் நிறத்தை தள்ளுபடி செய்வதிலிருந்து நமது மூளை பொருட்களின் நிறத்தை கண்டுபிடிப்பதால் இது நிகழ்கிறது.”
எனவே, நீங்கள் சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் பைத்தியம் என்று அர்த்தம் இல்லை. ஆனால், உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. இருப்பினும், சிலரின் மூளை மாற்றங்களை ஏற்க தயாராக இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“