கடந்த பல ஆண்டுகளாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் நிறுவனம் ஸ்ரீராம் குழுமம்.
ஸ்ரீராம் குழுமத்தில் உள்ள மூன்று நிறுவனங்களை இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் மற்றும் ஸ்ரீராம் கேப்பிட்டல் ஆகிய மூன்று நிறுவனங்களையும் இணைக்க ஸ்ரீராம் குழுமம் முடிவு செய்திருந்தது.
நம்ம ஊரு ஸ்ரீராம் குழும ஐபிஓ பட்டியல்.. முதலீட்டாளர்களுக்கு முதல் நாளே ஏமாற்றம்..!
ஸ்ரீராம் நிறுவனங்கள் இணைப்பு
இந்த இணைப்பு கடந்த டிசம்பர் மாதம் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் துணை தலைவரும் நிர்வாக இயக்குனருமான உமேஷ் ரேவாங்கர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த 3 நிறுவனங்களின் இணைப்பதற்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டப்பட்டது என்றும், அதில் ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீராம் பைனான்ஸ்
மேலும் இந்த மூன்று நிறுவனங்களை இணைத்து உருவாகும் நிறுவனத்தின் பெயர் ஸ்ரீராம் பைனான்ஸ் என்ற பெயரில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த பணிகள் 10 மாதங்களுக்குள் முடிவடையும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி ஒப்புதல்
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்ரீராம் கேபிடல் லிமிடெட் ஆகியவற்றை ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்காக ஸ்ரீராம் குழுமம் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜூன் 15ஆம் தேதி முதல் இந்த மூன்று நிறுவனங்களின் இணைப்பிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அறிவித்துள்ளது.
ஐஆர்டிஏ ஒப்புதல்
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்று விட்ட நிலையில் தற்போது ஐஆர்டிஏ மற்றும் பிற கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த நிதி சேவை நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
கடன்
மூன்று நிறுவனங்கள் இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸ் என்ற நிறுவனம் வணிக வாகனங்களுக்கான கடன், இருசக்கர வாகன கடன், தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் சிறு நிறுவன நிதி ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதால் கடன் வாங்குவதற்கும் பெறுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
உமேஷ் ரேவங்கர்
ஒருங்கிணைந்த நிறுவனத்திற்கு, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் செயல் துணைத் தலைவர் மற்றும் சிஇஓ ஆக இருந்த உமேஷ் ரேவங்கர் துணைத் தலைவராகவும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ Y ஸ்ரீநிவாச சக்ரவர்த்தி நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிறுவனம்
ஸ்ரீராம் குழுமம் 1974ஆம் ஆண்டு இராமமூர்த்தி தியாகராஜன், ஏவிஎஸ். ராஜா, டி. ஜெயராமன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு இந்தியக் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ஸ்ரீராம் குழுமம், ஆரம்பத்தில் சீட்டுக் கட்டுதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது. பின்னர், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி மற்றும் , ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் ஆகியவற்றின் மூலம் கடன் வழங்கும் தொழிலில் நுழைந்தது.
Shriram Group receives RBI nod for merger of financial services business
Shriram Group receives RBI nod for merger of financial services business | ஸ்ரீராம் குழுமத்தின் 3 நிறுவனங்கள் இணைய ரிசர்வ் வங்கி ஒப்புதல்!