10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்?

இன்னும் 10 ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ச்சி காணலாம் என மூன்று நிறுவனங்களை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதென்ன நிறுவனங்கள், எந்த துறை சார்ந்த நிறுவனங்கள்? இதனை ஏன் வாங்கலாம்? நிபுணர்களின் கருத்து என்ன?

இது குறித்து மார்செல்லஸ் முதலீட்டு மேலாளர்களின் நிறுவனர் சவுரப் முகர்ஜி என்ன கூறியுள்ளார், வாருங்கள் பார்க்கலாம்.

உலகின் ரொம்ப காஸ்ட்லியான 15 நகரங்கள் எது.. ஏன்..?

 என்னென்ன நிறுவனங்கள்?

என்னென்ன நிறுவனங்கள்?

டிசிஎஸ்

ஹெச் டி எஃப் சி வங்கி

டைட்டன்

டிசிஎஸ் மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கிகள் பாதுகாப்பான பங்குகளாகும். ஏற்கனவே இந்த பங்குகள் 100 பில்லியன் டாலர்களுக்கு அருகே உள்ளன. எனவே இது மிக கடினமாக இருக்காது.

டைட்டன்

டைட்டன்

டைட்டன் நிறுவனம் 50 பில்லியன் டாலர் நிறுவனமாகும். இது இன்னும் 20 வருடத்திற்கு நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 30% ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கேஸ் ப்ளோ மற்றும் மார்ஜின் விகிதங்கள் நன்றாக உள்ளன. இதன் காரணமாக இன்னும் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச் டி எஃப் சி வங்கி
 

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஹெச் டி எஃப் சி இணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், அதன் வளர்ச்சி விகிதம் இன்னும் தாறுமாறாக ஏற்றம் காணலாம். இவ்வாறு இணைக்கப்படும்போது 2வது பெரிய நிறுவனமான உருவெடுக்கலாம். இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் நிபுணர்கள் கூறியிருக்கலாம்.

 டிசிஎஸ்

டிசிஎஸ்

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், மிகப்பெரிய ஐடி சேவை வழங்குனராகும். ஐடி துறையில் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கினை நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Experts predict three companies could grow into trillion-dollar companies in the next 10 years.

Experts predict three companies could grow into trillion-dollar companies in the next 10 years./10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்?

Story first published: Thursday, June 16, 2022, 14:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.