10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20ஐ தாண்டியுள்ளது. இந்த நிலைமை டெங்கு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நுளம்பின் முட்டை வரட்சியான காலநிலையில் ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கும். மேலும் அந்த முட்டை தண்ணீருடன் சேரும் போது 8 முதல் 10 நாட்களுக்குள் மீண்டும் நுளம்புகள் உருவாகி சூழலில் சேருகின்றன.
இதன்படி, அதிக அளவில் சுற்றுச்சூழலில் எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களில் காணப்படும் கொங்கிரீட் (Concrete slabs) நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.