இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்?
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் வெளியேறத் தொடங்கியிருக்கலாம். இது சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருக்கலாம்.இதன் காரணமாக சந்தையானது சரிவிலேயே முடிவடைந்துள்ளது.
தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்தில் 506.41 புள்ளிகள் சரிந்து, 53,047.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 142.40 புள்ளிகளாகவும் இருந்தது. இதே ரூபாயின் மதிப்பும் 78.03 ரூபாயாக காலையில் தொடங்கியது.
முடிவு எப்படி?
இதனையடுயடுத்து முடிவிலும் பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1045.60 புள்ளிகள் குறைந்து, 51,495.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 331.60 புள்ளிகள் குறைந்து, 15,360.60 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 607 பங்குகள் ஏற்றத்திலும்,2680 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ 3% மேலாக சரிவிலும், நிஃப்டி 50, பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 5% மேலாகவும் சரிந்து காணப்படுகிறது. மற்ற குறியீடுகள் 2% வரையில் கீழாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள நெஸ்டில், பிரிட்டானியா, ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஓன் என் ஜி சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் நெஸ்டில் மட்டுமே டாப் கெயினராக ஏற்றம் கண்டுள்ளது. இதே டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், விப்ரோ, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
Closing bell: sensex crashed above 1000 points, nifty ends below 15,400
Closing bell: sensex crashed above 1000 points, nifty ends below 15,400 /1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. தொடரும் போராட்டம்.. கண்ணீரில் முதலீட்டாளர்கள்!