1994க்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க பெடரல் வங்கி: என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இந்த நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதன் தாக்கம் பங்குச்சந்தையில் எப்படி இருக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது. நேற்று உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம் காரணமாக 1.5 சதவீதம் முதல் 1.75 சதம் வரை வட்டிவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான 600 ஆன்லைன் லோன் ஆப்..! என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி..?

 28 ஆண்டுகளுக்குப் பிறகு

28 ஆண்டுகளுக்குப் பிறகு

1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 28 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கத்திற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்க பெடரல் வங்கி

பொருளாதாரத்தில் பணவீக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அச்சம் காரணமாக அமெரிக்க பெடரல் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த முடிவால் மிகப் பெரிய அளவில் பணவீக்கம் சரியாக வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில்லறை விற்பனை
 

சில்லறை விற்பனை

அமெரிக்க சில்லறை விற்பனை கடந்த மே மாதம் மிகவும் குறைந்ததையடுத்து அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கி அதன் 2ஆம் காலாண்டு வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 0% என குறைத்தது. நுகர்வோர் செலவினங்களின் மந்தநிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஏற்கனவே மந்தநிலையில் இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நிபுணர்கள்

பொருளாதார நிபுணர்கள்

அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருடங்களில் மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே வட்டி விகித உயர்வு என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் கவலை

உலக நாடுகள் கவலை

ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US Federal Reserve Announces Biggest Interest Rate Hike Since 1994

US Federal Reserve Announces Biggest Interest Rate Hike Since 1994 | 1994க்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க பெடரல் வங்கி: என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

Story first published: Thursday, June 16, 2022, 10:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.