ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சுலார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் ஜான் மொகமத் லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன் குல்காமில் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன். 2 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்.