மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை நகரின் அம்பொலி பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் எழுத்தாளர் 75 வயது நிரம்பிய தொழிலதிபருக்கு 2 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளார். கொடுத்த கடனை அந்த பெண் திருப்பி கேட்டுள்ளார்.
இதனிடையே, கடனை திருப்பி தருவதாக ஜூஹூ நகரில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலுக்கு அந்த பெண் எழுத்தாளரை தொழிலதிபர் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அந்த பெண் சென்றுள்ளார்.
அங்கு அந்த பெண் எழுத்தாளரை 75 வயது தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தான் நிகழ் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவன் எனவும், பாலியல் வன்கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தா கொலை செய்துவிடுவேன் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, தனக்கு நடந்த கொடூரம் குறித்தும், தான் மிரட்டப்பட்டது குறித்தும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட 75 வயது தொழிலதிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர் குறித்து போலீசில் புகார் அளிக்கக்கூடாது என தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்த சிலர் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கபப்ட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.