இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து 4 நாட்களாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கியதால் ரீடைல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் இந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது என்றால் மிகையில்லை.
அமெரிக்காவின் வட்டி உயர்வு இன்றைய வர்த்தகத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. தொடரும் போராட்டம்.. கண்ணீரில் முதலீட்டாளர்கள்!
பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அதிகரித்தது, இதனால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்திலேயே எடுக்கத் துவங்கினர்.
தொடர் சரிவு
இதனால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு மெல்ல மெல்ல தொடர்ந்து சரிய துவங்கி வர்த்தக முடிவில் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சென்செக்ஸ், நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1045.60 புள்ளிகள் சரிந்து 51,495.79 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 331.55 புள்ளிகள் சரிந்து 15,360.60 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதிலும் முக்கியமாக இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு சற்றும் எதிர்பார்க்காத விதமாக 15,335.10 புள்ளிகளை அடைந்து 52 வார சரிவை தொட்டது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் 3,474 பங்குகளில் 2756 நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 5.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளனர்.
இன்றைய சரிவுக்கு முக்கியக் காரணம் இதுதான்
1. அமெரிக்கப் பெடரல் வங்கி 0.75 சதவீதம் உயர்த்திய நிலையில், அடுத்தக் கூட்டத்திலும் இதேபோன்று 0.50 -0.75 வரையில் வட்டியை உயர்த்த முடிவு செய்துள்ளது.
2. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை குறைக்கப் பெடரல் ரிசர்வ் திட்டம்
3. இந்திய சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 1,92,104 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
4. அமெரிக்காவின் முடிவால் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் சரிவு, இதனால் இந்திய சந்தையும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
5. அமெரிக்கா, பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்தில் ரெசிஷன் வருமோ என்ற அச்சம் அதிகமாகவே உள்ளது. இதன் வெளிப்பாடாகவே அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகிறது,
Important factors behind Nifty at 52-week crash
Important factors behind Nifty at 52-week crash 52 வார சரிவில் நிஃப்டி.. என்ன காரணம் தெரியுமா..?!