தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடா்ந்த வழக்கின் தீா்ப்பை உயர்நீதிமன்றம் நாளை அறிவிக்கின்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றியது.
இந்த தீா்மானத்தின் மீது ஆளுநா் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, நளினி, ரவிச்சந்திரன் வழக்கின் தீா்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாளை அறிவிக்க உள்ளனர்.