Rasi Palan 16th June 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 16th June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 16ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
சொல்வதை எல்லாம் செய்து முடிக்கும்போது இது ஒரு உணர்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் ராசிபலனில் முக்கியமாக ஆழமான உணர்ச்சி விகாரங்களை கண்டறியலாம். குடும்ப உறுப்பினர்கள் முதலில் முன்னுரிமையில் இருக்கிறார்கள். நண்பர்களும் சக ஊழியர்களும் அடுத்து இருக்கிறார்கள். உங்களுக்குத் தேவையானது ஒழுங்குதான். ஒரு காலத்தில் குழப்பம் இருந்தது. இப்போது இல்லை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
ஒரு தொழில்முறை விஷயத்தில் உங்களுக்கு வழி கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. நீங்கள் வெற்றியடைந்தால், எல்லாம் நன்றாக இருக்கும். இல்லையெனில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த லட்சியத்தையும் நிறைவேற்ற, நேரம் சரியாக இருக்க வேண்டும். உங்களால் வெல்ல முடியாத போராட்டங்களில் இருந்து பயனடைவது சிறிதுதான். ஆனால், இழப்பு அதிகம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
நீங்கள் கடந்த காலத்தில் சில நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க விரும்பலாம். எதிர்காலத்தில் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த உருவாக்கப்பட்ட திட்டங்களில் அதிக கவனம் செலுத்தலாம். இருப்பினும், நீங்கள் உண்மையில் அதிலிருந்து எவ்வளவு பெற முடியும் என்பதுதான் முக்கியமான காரணி. முதல் படி, உங்களிடம் உள்ள நிதியை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
இன்று நிச்சயமாக சில உணர்ச்சிகரமான ஏற்ற தாழ்வுகள் இருக்கும், எப்போதாவது தவறான புரிதல் கூட இருக்கலாம். பெரும்பாலும் மதியத்தில் இந்த தவறான புரிதல் இருக்கும். நிதானமாக இருங்கள், நன்மை பயக்கும் நீண்ட கால திட்டங்களை கவனியுங்கள். நீங்கள் தவறான முடிவெடுக்கும் நபர்களால் மிகவும் வருத்தப்பட வேண்டாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
பிரச்னைகளை தீர்ப்பது மர்மமாக இருக்கலாம், அனேகமாக, உணர்ச்சிவசப்படுவது அல்லது தவறான அறிவுறுத்தல்கள் இருக்கலாம். மற்றவர்கள் ஒன்றை செய்யத் தவறினால் அது கேலிக்கூத்தாகவும் இருக்கலாம். இதற்கு நல்ல ஆலோசனை என்றால், அநேகமாக அது உங்கள் நகைச்சுவை உணர்வில் தொடங்கலாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
எப்போதாவது நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக்கொள்ள உங்களுக்கு சிறிது நேரம் வழங்கப்படுகிறது. இது அத்தகைய ஒரு நேரமாக இருக்க வேண்டும். மேலும், யார் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் சரியாகக் கண்டறிய முடிந்தால், உங்கள் எதிர்கால கேரக்டரைப் பற்றிய நல்ல கருத்தை பெறுவீர்கள். அது நல்ல விஷயமாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
இப்போது நடக்கும் நிகழ்வுகள், புதுமையை இழந்துவிட்ட உறவின் வலிமையைக் கணக்கிடுவதில் உங்களைக் குறைத்து சிந்திக்க வைக்கும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களிடம் உள்ளதை வைத்துக்கொண்டு நன்றியுடன் இருங்கள். மேலும், மக்கள் ஏதாவது விஷயங்களை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு கிடைத்ததைப் பாராட்டுவதில் இருந்து மகிழ்ச்சி பெருகும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
எளிய தீர்வுகள் இல்லை. இருப்பினும், மற்றவர்கள் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்வதையும், தேவையான ஆதரவை உங்களுக்கு வழங்குவதையும் நீங்கள் உறுதிசெய்வீர்கள். துணைவருக்கு இயல்பான பாசத்தைவிட பத்து மடங்கு அதிகம் தேவை என்பதை நீங்கள் கவனிக்கத் தவறினால், அது இந்த நேரத்தில் உணர்ச்சிகரமான சூழ்நிலையாக இருக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
கடந்த காலத்தில் நீங்கள் பல கடுமையான பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மற்றவர்களை நம்புவதற்கு எல்லாவற்றையும் விட கடினமானதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டவசமாக, உணர்ச்சி சிக்கல்கள் சிறியதாகத் தெரிகிறது. எனவே, நடைமுறை விஷயங்களை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். கூட்டாளிகள் உங்கள் வணிக அணுகுமுறையைப் பாராட்டுவார்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் ராசிக்கட்டத்தின் ராசிபலன் மாயையாக இருக்கிறது. மேலும், இது விவகாரத்தின் மையத்தை கண்டுபிடிப்பதற்கான கேள்வியாக இருக்கிறது. உங்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக, நீங்கள் இரண்டு உணர்ச்சித் தேர்வுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்வது போல் தோன்றுகிறது. அவை நண்பர்கள் அல்லது காதலர்களைவிட குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையது. அதற்கான, தீர்வு உங்களிடம் தான் உள்ளது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
அடுத்த சில வாரங்களில் சிறிது நேரமே கிடைக்கும் வாய்ப்பான முற்றிலும் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க உங்களுக்கு உதவும். முட்டாள்தனமாக நினைக்கும் அபாயத்தில் கூட, உங்கள் எல்லா திட்டங்களையும் பற்றி பேசுவதே இப்போது முற்றிலும் முக்கியமான விஷயம். துணைவர் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றால், அது அவர்களின் பிரச்சனை!
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
நீங்கள் ஆக்கப்பூர்வமான மனநிலையில் இருக்கிறீர்கள், வேலையிலும் வீட்டிலும், மந்தமான செயல்களைக்கூட அனுபவிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் புதிய கொள்முதல் அல்லது முதலீடுகளை செய்யவதை கருத்தில் கொண்டால், தொடர்ந்து பேசி, உண்மைகளைச் சரி பாருங்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் நீங்கள் மிகவும் உறுதியான நிலையில் இருப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“