Russia – Ukraine Crisis: ஜோ பைடன் 41 நிமிட போன் கால்.. அமெரிக்கா, சீனா எடுத்த முடிவு..!

உலக நாடுகள் பணவீக்கத்தால் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இதை மேலும் மோசமாக்க உக்ரைன் – ரஷ்யா போர் மீண்டும் வெடிக்கத் துவங்கும் நிலை உருவாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வந்த நிலையில் அமெரிக்க அரசின் அறிவிப்பு உக்ரைன் சீனா மத்தியில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ரஷ்யாவுக்கு ஆதாரமாகச் சீனாவும் களமிறங்க முடிவு செய்துள்ள காரணத்தால் சர்வதேச சந்தையில் குழப்பமான சூழ்நிலையில் உருவாகியுள்ளது.

இந்தியா தான் பெஸ்ட் கஸ்டமர்: சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளியது ரஷ்யா!

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உருவான பாதிப்புகளில் இருந்து வல்லரசு நாடுகள் கூட மீண்டு வராத நிலையில், பணவீக்க பாதிப்பால் பொருளாதாரம் முடங்கி ரெசிஷன் நிலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் முடியாத நிலையில் அமெரிக்க அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்ட அறிப்பிவில் உக்ரைன் நாட்டிற்கு ஆன்டி ஷிப் ராக்கெட் சிஸ்டம்ஸ், ஆர்டில்லரி ராக்கெட், howitzers, போன்ற பல அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உதவிகளைத் தாண்டி கூடுதலாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

 ஆயுத சப்ளை
 

ஆயுத சப்ளை

அமெரிக்கா உக்ரைனுக்குக் கொடுக்கும் ஆயுதங்களின் மதிப்பு 1 பில்லியன் டாலர் மதிப்புடையது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது, ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகள் அதிகப்படியான நிதியுதவியும், ஆயுதங்களையும் அளித்துள்ளது.

41 நிமிட போன் கால்

41 நிமிட போன் கால்

இந்நிலையில் இக்கூடுதலான ஆயுதங்கள் அளிப்பது குறித்து ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் சுமார் 41 நிமிடம் ஜோ பைடன் போன் காலில் பேசியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இதேவேளையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதன்கிழமை உக்ரைன் போர் பிரச்சனையைத் தீர்க்கவும், உரிய முடிவுகளை எடுக்கவும் தங்கள் நாடு தயராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனா ஆரம்பம் முதல் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பதற்றமான சூழ்நிலை

பதற்றமான சூழ்நிலை

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதல்கள் ரஷ்யா பெரிய அளவில் குறைத்துள்ள வேளையில் இரு நாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சி செய்து வந்தாலும், இரு நாடுகளுக்கு மத்தியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஆயுத சப்ளை மற்றும் சீனா-வின் பேச்சுவார்த்தை அழைப்பு புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joe Biden 41 mins phone call on weapons to zelenskyy; China ready to talk; vladimir putin Plan

Joe Biden 41 mins phone call on 1 billion dollar worth of additional weapons supply aid to volodymyr zelenskyy; China ready to help settle Ukraine crisis; Vladimir putin may take new steps to take control

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.