சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என உ.தனியரசு தெரிவித்திருக்கிறார். அதிமுகவின் முழு அதிகாரத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தன்வசப்படுத்தி வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த முறை பணிந்து போகக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி உள்ளதாக அவர் தம் பேட்டியில் தெரிவித்தார்.