அமெரிக்காவின் ஒற்றை முடிவு.. ஒரு வருடம் பின்னுக்கு சென்ற சென்செக்ஸ்..!

அமெரிக்க நிதியியல் வரலாற்றில் கடந்த 28 வருடத்தில் செய்திடாத வகையில் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை சுமார் 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாகே வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜூன் 9, 2021ஆம் ஆண்டு நிலவரமான 52000 புள்ளிகள் இழந்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. தரையை தட்டும் பிட்காயின்..!

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 75 அடிப்படை புள்ளி உயர்த்தி 1.5-1.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இக்கூட்டத்தில் பேசி பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவர் கூறுகையில் இந்த வட்டி விகிதம் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 8.6 சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான்.

ரெசிஷன்

ரெசிஷன்

இதேபோல் அமெரிக்கா பொருளாதாரம் ரெசிஷனுக்குள் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம், இதனால் ஜூலை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை கூடுதலாக 0.75 சதவீதம் வரை உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம் என கூறினார் ஜெரோம் பவல்.

1000 புள்ளிகள் சரிவு
 

1000 புள்ளிகள் சரிவு

இந்த அறிவிப்பால் வியாழக்கிழமை 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் தடுமாறி வருகிறது. மேலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 7 நாட்களுக்குள் 3800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன்

20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன்

மும்பை பங்குச்சந்தை அதன் மோசமான நிலைக்கு செல்லவில்லை என்றாலும் 20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது, சென்செக்ஸ் 20 சதவீதம் சரிந்தால் 49,373 புள்ளிகளை எட்டும், நிஃப்டி 4,883 புள்ளிகளை எட்டும்.

அன்னிய செலாவணி

அன்னிய செலாவணி

இதன் அடிப்படையில் இந்தியப் பங்குச்சந்தை, வர்த்தகச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் அடுத்தடுத்து வெளியேறத் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் துவங்கியுள்ளனர் இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்.

1.92 லட்சம் கோடி ரூபாய்

1.92 லட்சம் கோடி ரூபாய்

ஜூந் மாதம் மட்டும் இதுவரை 25500 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது, இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1.92 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு சந்தையை விட்டு வெளியேறியுள்ளது.

ரூ.15.74 லட்சம் கோடி இழப்பு

ரூ.15.74 லட்சம் கோடி இழப்பு

கடந்த வெள்ளிக்கிழமை முதல் முதலீட்டாளர்கள் மொத்த சந்தை மதிப்பு சரிந்து வரும் நிலையில் வியாழக்கிழமை வீழ்ச்சி வரையில் ரூ.15.74 லட்சம் கோடியை பிஎஸ்ஈ முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதன் வாயிலாக சந்தை மூலதனம் ரூ.239.5 லட்சம் கோடியாக குறைந்தது – இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூ.240 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்தது இதுவே முதல்முறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA Federal Reserve highest rate hike in 28 years takes Sensex back a year

USA Federal Reserve highest rate hike in 28 years takes Sensex back a year அமெரிக்காவின் ஒற்றை முடிவு.. ஒரு வருட பின்னுக்கு சென்ற சென்செக்ஸ்..!

Story first published: Friday, June 17, 2022, 15:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.