ஆத்தி.. ஒரு டிவி 75 லட்சம் ரூபாபாயா.. அப்படி என்ன ஸ்பெஷல்?

அந்த காலத்தில் தாத்தா பாட்டி மார்கள் காலத்தில் ஊரில் ஓன்றிரண்டு பேர் வீட்டில் டிவி இருக்கும். அதுவும் மிகப்பெரிய சைஸ்களில் இருக்கும். அதனை ஒரு ஆள் தூக்கி செல்வதே கடினமானதாக இருக்கும்.

ஆனால் அதற்கு பிறகு சிறிய ரக டிவிகள், எல் இ டி டிவிகள், ஸ்மார்ட் டிவிகள், தியேட்டர்கள் என வளர்ந்துள்ளது.

இன்று இன்னும் ஒரு படி மேலே போய் மக்கள் ஓடிடி தளங்களில் சந்தா கட்டி, குடும்பமே உட்கார்ந்து படம் பார்க்கும் முறை வந்துவிட்டது. அந்தளவுக்கு தொழில் நுட்பம், டெக்னாலஜிக்கள் வளர்ந்து விட்டன.

இந்தி தெரியாதா? தரமான பதிலடி கொடுத்த தமிழச்சி..! ஐடி நிறுவனத்திலும் இதுதான் நிலைமை..!

ரோலபிள் டிவியா?

ரோலபிள் டிவியா?

இந்த தொழில் நுட்பத்தில் இன்னொரு படி மேலே போய், தற்போது ரோலாபிள் டிவியும் வந்து விட்டது. இதனை தற்போது எல்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஓடிடி மூலம் வீட்டில் இருந்து படம் பார்க்க இதுபோன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்கள் மிக பொருத்தமான அம்சங்களாக உள்ளன. இன்றைய காலத்து இளைஞர்கள் மத்தியிலும் இதுபோன்ற புதிய அம்சங்களுடனான டிவிக்கள் என பலவும் விரும்பப்படுகின்றன.

சிறப்பம்சம் என்ன?

சிறப்பம்சம் என்ன?

இந்த ரோலிங் டிவியின் சிறப்பம்சமே இதனை ரோலிங் செய்து கொள்ளலாம் என்பது தான். அதாவது இந்த டிவியானது ஒரு பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. நீங்கள் டிவியினை பயன்படுத்ததாத சமயங்களில் ரோலபிள் ஆப்சனை செய்தால், டிவியானது சுருண்டு பாக்ஸினுள் சென்று விடுகின்றது. வேண்டும் எனும் போது அதனை பாக்சினுள் இருந்து வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் அறிமுகம்
 

இந்தியாவில் அறிமுகம்

தென் கொரியாவினை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனமான எல்ஜி, இதுபோன்ற சிறப்பம்சம் கொண்ட தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வருவதில் பேர் போனது. இந்த டிவிக்கு பல நாடுகளிலும் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தான் தற்போது இந்தியாவில் அதன் ரோலபிள் டிவி (LG rollable OLED TV) அறிமுகம் செய்துள்ளது.

மலைக்க வைக்கும் விலை

மலைக்க வைக்கும் விலை

இந்த டிவி பற்றி கேட்கும்போதே பலரின் ஆர்வத்தினையும் தூண்டுவதாய் உள்ளது. எனினும் இதன் விலையை கேட்டுக்கும் போது தான் தலையே சுற்ற வைக்கிறது எனலாம். இதன் விலையானய்ஹி 75 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிவியானது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தாது எனலாம்.

எங்கு விற்பனை?

எங்கு விற்பனை?

இதேபோல இந்த டிவியானது அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தேர்தெடுக்கப்பட்ட ஷோரூம்களில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது. தற்போதைக்கு மும்பபையில் உள்ள க்ரோமா ஸ்டோரில் விற்பனைக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆடம்பர தயாரிப்பு

ஆடம்பர தயாரிப்பு

இது முழுக்க ஒரு ஆடம்பர தயாரிப்பாக உள்ள இந்த டிவியானது, லிக்விட் ஸ்மூத் ஆதரவு கொண்ட 65 இன்ச் ஒ எல் இ டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் செல்ப் லைட்டிங் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும் இது சாதரணமாக எல்இடி டிவிகளில் உள்ளதை போன்று தானே இயங்குகிறது, இதில் ரோலபிள் மட்டும் தான் சிறப்பம்சமாக இருக்கிறது. இதற்கே இவ்வளவு விலையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தும்போது தான் அத முழு சிறப்பம்சமும் தெரிய வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lg எல்ஜி

English summary

oh my goodness: Is the price of a TV Rs 75 lakh? So what’s the highlight?

LG has launched its Rollable TV in India. The price is said to be 75 lakh rupees.

Story first published: Friday, June 17, 2022, 16:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.