புது டெல்லி: 700-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், அதிவேக சார்ஜிங் அம்சம் போன்றவற்றுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
ஹெட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது போட் நிறுவனம். கடந்த 2015 முதலே இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், போட் நிறுவனத்தின் புதிய வரவாக ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதற்கு அறிமுக சலுகையும் அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்: ஒரு வருட உத்தரவாதத்துடன் இந்த வாட்ச் வெளிவந்துள்ளது. 1.69 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 200 mAh பேட்டரி, 30 நிமிட சார்ஜிங் டைம், ப்ளூடூத் வெர்ஷன் V 5.0, 700-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், ஆக்டிவிட்டி டிரேக்கர், 7 நாட்கள் பேட்டரி லைஃப், 100-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேசஸ், லைவ் கிரிக்கெட் ஸ்கோர், கால்ஸ் மற்றும் டெக்ஸ் நோட்டிபிகேஷன்ஸ், செடன்ட்ரி அலர்ட் போன்றவை இதில் உள்ளது.
இதன் அசல் விலை ரூ.6,990 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அறிமுக சலுகையாக ரூ.2,499 ரூபாய்க்கு இந்த வாட்ச் கிடைக்கிறது. அமேசான் மற்றும் போட் தளத்தின் மூலம் இந்த வாட்ச் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அறிமுக சலுகை முதல் சில வாட்ச்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.