சேலத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி வழியாக திருவண்ணாமலை சென்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒற்றை தலைமை தேவை என்று அதிமுகவில் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் சேலத்தில் நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை மற்றும் கேபி முனுசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை சென்றார்.
வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூங்கொத்து மற்றும் சால்வைகள் அளித்து கட்சியினர் வரவேற்றனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளர் என அழைத்து கோஷங்களும் எழுப்பப்பட்டன.