எனக்கே தெரியாமல் எங்கள் நிறுவனத்தின் ஐபிஓவா? கிண்டல் செய்த போன்பே சிஇஒ

போன்பே நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் பட்டியலிடப்பட உள்ளதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் போன்பே நிறுவனத்தின் சிஇஓ சமீர் நிகாம் ‘எனக்கே தெரியாமல் ஐபிஓ பட்டியல் இடப்போகிறதா? என கிண்டலுடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘போன்பே நிறுவனத்தின் ஐபிஓ குறித்து வரும் செய்திகள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஐபிஓ தாக்கல் செய்வது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்றும் ஒருவேளை ஊடகங்கள் எங்களுடைய ஐபிஓ முதலீட்டை விரும்புகிறதோ என்று தெரியவில்லை என்றும் அவர் கிண்டலுடன் கூறியுள்ளார்.

ஐபிஓ

பிடிஐ அறிக்கையின்படி முதலீட்டு வங்கி ஆதாரங்களை மேற்கோள் காட்டி, போன்பே நிறுவனம் தனது நிதிச் சேவைகள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதற்கும் அதன் முக்கிய UPI அடிப்படையிலான கட்டணச் செயல்பாடுகளை ஆழப்படுத்துவதற்கும் $8-10 பில்லியன் ஐபிஓ மூலம் நிதி திரட்ட பரிசீலித்து வருவதாகக் கூறியது.

மறுப்பு

மறுப்பு

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள போன்பே நிறுவனத்தின் சிஇஓ சமீர் இப்போதைக்கு ஐபிஓ ஐடியா எதுவும் இல்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் ஐபிஓ தேவை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 போன்பே

போன்பே

போன்பே நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறது.

ஆலோசனை
 

ஆலோசனை

வால்மார்ட் கட்டுப்பாட்டிலுள்ள பிளிப்கார்ட் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இருக்கும் போன்பே விரைவில் வங்கியாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை தற்போது போன்பே பயன்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

மேலும் போன்பே நிறுவனத்தின் தலைமையகம் தற்போது சிங்கப்பூரில் இருந்து வரும் நிலையில் அதனை இந்தியாவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இந்த நிறுவனத்தை இந்திய நிறுவனம் என்று காண்பித்துக் கொள்ள அதிக அக்கறை எடுக்கப்பட்டு வருவதாகவும் போன்பே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி சேவை

நிதி சேவை

இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று பணம் செலுத்துதல் மற்றும் நிதி சேவை நிறுவனமாக கடந்த சில ஆண்டுகளாக போன்பே செயல்பட்டு வருகிறது. போன்பே நிறுவனம் நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது அதன் காலாண்டில் நிதியறிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PhonePe CEO Sameer Nigam says about IPO plan!

PhonePe CEO Sameer Nigam says about IPO plan! | எனக்கே தெரியாமல் எங்கள் நிறுவனத்தின் ஐபிஓவா? கிண்டல் செய்த போன்பே சிஇஒ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.