சமூக ஊடகங்களின் காலத்தில் மீம்ஸ்கள் தான் உடனடியாக அரசியல் நிகழ்வுகளுக்கு உடனடியாக விமர்சனங்களை வைத்து எதிர்வினையாற்றுகின்றன. அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் போல மீம்ஸ் கிரியேட்டர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள்.
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவாதம், வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகள் இன்றைய பரபரப்பான நிகழ்வுகளாக இருக்கின்றன. நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த நிகழ்வுகளை மையமாக வைத்தே மீம்ஸ் சாட்டையை சுழற்றியுள்ளனர்.
மீம்ஸ் உருவாக்குவதற்கு நகைச்சுவை உணர்வும் நாகரிகமான மொழியும் அரசியல் அறிவும் இருந்தால் போதும். நாகரிகமான மீம்ஸ்கள் மட்டுமே கட்சி பேதங்களைத் தாண்டி அனைவரின் கவனத்தைப் பெறும். அப்படி இன்று கவனத்தைப் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
கட்டனூர் சேக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.. செய்தி குறித்து மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
ஜேம்ஸ் ஸ்டேன்லி என்ற ட்விட்டர் பயனர், “வடக்க முழுக்க பத்திகிட்டு எரியுது.. *மொட்ட ஜீ கிட்ட சொன்னியா.. புல்டோசர் எங்க.. அவனுங்க கொளுத்துனதே புல்டோசரதான்..” பாஜகவினரை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தால் கோபம் அடைந்த வட மாநில இளைஞர்கள் ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தது குறித்து கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “உ.பி யில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு தீ வைப்பு என்ற செய்தி குறித்து , பரட்டை… பத்தவச்சிட்டியே பரட்டை..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஜி: அடேய் அந்த டிரெயின் எல்லாம் ஏன்டா எரியுது?
எல்லாத் உங்க பவர்ல தான் பாஸ் எரியுது..
அடேய்.. பவர்ல எரியலடா.. அக்னிபாத்னு ஒரு திட்டம் அறிவிச்சமே, அந்த தவறுல எரியுதுடா..”
என்று பாஜகவினரை தீப்பொறி ஆறுமுகம் வடிவேலும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? பயனர், மற்றொரு மீம்ஸில், “பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு, அப்படி பதவியை ஏற்ற பிறகு, ஓபிஎஸ் டு ஓபிஎஸ்” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை!” என்ற செய்தி குறித்து மோடி, அமித்ஷா கூட தான?” என்று கேட்டு மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்துள்ள நிலையில், Mannar & Company என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “இரட்டை இலைக்கு பதிலாக “இரட்டை தலை” ன்னு கட்சி சின்னத்தை வச்சிட்டா இரட்டைத் தலைமை.. ஒற்றைத் தலைமைன்னு பிரச்சினைகள் இருக்காது! ஐடியா சொல்றேன் சார்.” என்று விவேக் குரலில் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
சசிகுமார் ஜே என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பண இருப்பு ரூ. 30,500 கோடியாக உயர்வு! செய்தி…
இவரு இங்க இந்தியால இருக்க வங்கி பணத்தைத்தான் டச் பண்ணுவாராம் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணத்தை தொட மாட்டாராம்…” என்று மறைமுகமாக மீம்ஸ் மூலம் மோடியை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஜெயிலர் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் சோனு என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “பீஸ்டு கத மால்குள்ளேயே நடந்த மாதிரி ..
ஜெயிலர் கதையும் ஜெயிலுக்குள்ளயே நடக்குமோ.” என்று வடிவேல் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
அக்னிபாத் போராட்டத்தில் பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்ட செய்தியைக் குறிப்பிட்டு ராஜசேகர் கிரிஷ் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஏண்டா அவனுங்க வந்து ஆபீச கொளுத்துர வரைக்கும் பாத்துட்டு சும்மாவா இருந்தீங்க.???
கும்பலா தீப்பந்தத்தை தூக்கிட்டு பாரத் மாதா கி ஜே…னு கத்திட்டு வர்ரத பாத்ததும், நம்ம பசங்கதான் எங்கயோ போய் சம்பவம் பண்ணிட்டு ரிட்டர்ன் வரானுங்க போலனு நினைச்சு கேட்டை தொறந்து விட்டேன் ஜி.!!!” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
பாஜக தலைவர் ஹெச். ராஜா, “கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது” என்று கூறியதற்கு, Msd இதயவன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதுல ஒண்ணு தான் சைனாகாரன் கிரகப்பிரவேசம் பண்ணுனதா?!” என்று கிண்டல் செய்துள்ளார்.
இதனிடையே, மிடுக்க என்ற ட்விட்டர் பயனர், “யாரோட உதவி இல்லாம தனியா நிக்கிறது கெத்து இல்ல…. அதுக்கு பேரு திமிர்….” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார். இந்த மீம்ஸ் பலரையும் குத்தி கிழித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“