ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கிடந்த இளைஞர் சடலம்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையில் ஏற்பட்ட் தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது மகன் தாவித்ராஜ் கடந்த 14ம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு வாயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தேவி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்ர் விசாரணை மேற்கொண்டனர். பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, விசாரணையை தீவிரபடுத்திய காவல்துறையினர் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரது நண்பர்களுடன் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் நடந்திய விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சம்பவதன்று தாவித்ராஜ் நண்பர்களான சங்கீதா, ஜீவா, ராஜேஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, தாவித்ராஜா, சங்கீதாவின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனாஅல், ஜூவா, ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் தாவித்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மயங்கிய அவரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் தெற்கு நுழைவு வாயிலில் போட்டுவிட்டு தப்பிச்சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.