ஓன்னா அடிச்சா எப்படி.. தனித்தனியா வரனும்.. எலான் மஸ்க்-ஐ புலம்பவிட்ட ஊழியர்கள்..!

தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் வரம் கொண்ட எலான் மஸ்க் சமீப காலத்தில் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

எலான் மஸ் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளார். ஆனால் இதே வேளையில் அனைத்து நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்களிடம் இருந்து அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார்.

இது மேலும் தொடர்ந்தால் நிறுவனத்தை இயக்குவதே கஷ்டமாகி விடும் என்ற நிலைமை உள்ளது. அப்படி என்ன நடந்தது..?

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எலான் மஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கினார்.

14% ஊழியர்களைப் பணிநீக்கம்

14% ஊழியர்களைப் பணிநீக்கம்

இதைத் தொடர்ந்து பொருளாதார மந்த நிலையைக் கணக்குக் காட்டி 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார் ஆனால் தற்போது 14 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார்.

டெஸ்லா சீனா

டெஸ்லா சீனா

இந்த வாரம் மட்டும் சுமார் 20 டெஸ்லா ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார் எலான் மஸ்க். இதேபோல் சீனாவில் திட்டமிட்டு இருந்த 3 வேலைவாய்ப்புத் தேர்வு நிகழ்வ ரத்துச் செய்தார் எலான் மஸ்க்.

கடும் கோபம்
 

கடும் கோபம்

இப்படிச் சொன்னதை விடவும் அதிகப்படியான எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த காரணத்தாலும், ஊழியர்கள் மீது அதிகப்படியான சுமை வைக்கப்படும் காரணத்தாலும் டெஸ்லா ஊழியர்கள் எலான் மஸ்க் மீது கடுமையாகக் கோபத்தில் உள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ்

ஸ்பேஸ்எக்ஸ்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் எலான் மஸ்க் நடந்துகொள்ளும் விதம் கவனத்தைச் சிரதவைக்கும் விதமாகவும், அசிங்கப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது, இதேபோல் அவருடைய ஒவ்வொரு டிவீட்டும் நிறுவனத்தின் பப்ளிக் ஸ்டேட்மென்ட் ஆக இருக்கிறது, எலான் பிரண்டில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ்-ஐ தனியாகப் பிரிக்க வேண்டும் என ஒப்பன் லெட்டர் எழுதியுள்ளனர்.

ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம்

ஸ்பேஸ்எக்ஸ் பணிநீக்கம்

இந்தப் பிரச்சனை எலான் மஸ்க்-கிற்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஸ்பேஸ்எக்ஸ் நிர்வாகத்திற்கும் நெருக்கிய நிலையில் நிறுவனத்திற்குள்ளேயே தனிப்பட்ட ஆய்வு மேற்கொண்டு இந்த ஒப்பன் லெட்டர் எழுதியவர்களையும், அதற்குத் துணை நின்றவர்களையும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் க்வைன் ஷாட்வெல் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞசல் அனுப்பியுள்ளார். இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் சோகமாகவும் கடுப்பாகவும் உள்ளார்.

 டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றாத நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களை வீடியோ கான்பரென்ஸ் சந்திப்பு வாயிலாகப் பேசினார்.

10 நிமிடம் தாமதம்

10 நிமிடம் தாமதம்

இந்தக் கூட்டத்திற்கு 10 நிமிடம் தாமதமாக வந்தது மட்டும் அல்லாமல் வீட்டில் சமையல் அறையில் இருந்து பேசியது டிவிட்டர் ஊழியர்களுக்குக் கேபத்தை ஏற்படுத்தியது.

இண்டர்நெட் இணைப்பு

இண்டர்நெட் இணைப்பு

இதேபோல் இக்கூட்டத்தின் போது எலான் மஸ்க் இண்டர்நெட் இணைப்பு அதைக்கடிக்கத் துண்டிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ஆடியோவில் கோளாறு இருந்தது. இந்நிலையில் டிவிட்டர் ஊழியர்கள் எலான் மஸ்க்-யிடம் பல கேள்விகளை அடுத்தடுத்து முன்வைத்தனர்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

டிவிட்டர் நிறுவனத்தில் எதிர்காலத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, தற்போது நிறுவனத்தின் வருவாய் விடவும், செலவுகள் அதிகமாக உள்ளது. இதனால் நிறுவனத்தின் நிதிநிலையைச் சமாளிக்கக் கட்டாயம் பணிநீக்கம் இருக்கும் ஆனால் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டார் எலான் மஸ்க்.

 வொர்க் பரம் ஹோம்

வொர்க் பரம் ஹோம்

டிவிட்டர் நிறுவனத்தில் எதிர்காலத்தில் வொர்க் பரம் ஹோம் பற்றிக் கேட்டப்போது வீட்டில் இருந்து பணியாற்றும் ஒருவர் பிற ஊழியர்களைக் காட்டிலும் சிறப்பாகப் பணியாற்றினால் அவர் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது, அதேவேளையில் அவரைப் பணிநீக்கம் செய்வதும் அவசியம் இருக்காது. டிவிட்டர் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தரமாக வொர்க் பரம் கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk facing trouble with tesla, SpaceX, Twitter employees at same time; Check full details

Elon Musk facing trouble with tesla, SpaceX, Twitter employees at same time; Check full details ஓன்னா அடிச்சா எப்படி.. தனித்தனியா வரனும்.. எலான் மஸ்க்-ஐ புலம்பவிட்ட ஊழியர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.