பெங்களூரு,
உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 4ம் இடத்தில் இருக்கும் வீராங்கனை இந்தியாவின் அர்ச்சனா காமத். இவர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அர்ச்சனா முதலில் டேபிள் டென்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிர்வாகிகள் குழுவால் அவர் கைவிடப்பட்டார்.
இந்த நிலையில் அர்ச்சனா காமத் தன்னை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீக்கியதை எதிர்த்து மத்திய அரசு, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் ஆஜராகுமாறு அனைத்து தரப்பினருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.