குஜராத் காந்திநகரில் உள்ள சாலைக்கு மோடியின் தாய் பெயர் வைக்க முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆமதாபாத்-குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சாலைக்கு, பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரதமர் மோடியின் தாய் ஹீராபென், காந்திநகரில் வசிக்கிறார். ஹீராபென்னுக்கு நாளை ௯௯ வயது முடிந்து, 100 வது வயது பிறக்கிறது.

latest tamil news

இதையொட்டி, குஜராத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி, தாயை சந்தித்து ஆசி பெறுகிறார்.இந்நிலையில், காந்திநகர் மேயர் ஹிதேஷ் மக்வானா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒருவர் 100 வயது வாழ்வது பெரும் சாதனை. பிரதமர் மோடியின் தாய் ஹீராபென், 100வது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

இதை கவுரவிக்கும் வகையில், காந்திநகரில் ‘ரெய்சன் பெட்ரோல் பங்க்’ அமைந்துள்ள 80 மீட்டர் நீள சாலைக்கு, ‘பூஜ்ய ஹீராபென் மார்க்’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.