குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மைக் குழுவை பாஜக அமைத்துள்ளது.
மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் ஒருங்கிணைப்பாளாரக உள்ள குழுவில், கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக வரும் 21ஆம் தேதியன்று டெல்லியில் எதிர்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 17 கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.