குடியரசுத் தலைவரின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், அகிம்சா சோஷலிஸ்ட் என்ற கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும், யோகா மாஸ்டராக பணியாற்றும் ரமேஷ், மகாத்மா காந்தியின் மீதான பற்று காரணமாக அவரின் உடை அலங்காரத்தோடு வளம் வருகிறார்.
ஊரக உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தல் போட்டியிட தலைநகர் டெல்லி சென்று, நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் ஆலோசனை செய்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனி ஒரு ஆளாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.