கேரளாவில் கொரோனா வேகம்| Dinamalar

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 3419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அறிக்கை: கொரோனா அதிகரித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். 6 நாட்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டோர் நோய்பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.