கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. தரையை தட்டும் பிட்காயின்..!

புது யுக தங்கம்னு சொல்லப்பட்ட கிரிப்டோ 72% விலை விழுந்திருக்கு. ஆனா நம்ம உண்மையான தங்கம் ஸ்டெடியா இருக்கு.

இதுதான் மனிதன் உருவாக்கியதற்கும் இயற்கை உருவாக்கியதற்கும் உள்ள வித்தியாசம். இதைதானேப்பா நான் சொன்னேன் எனப் பிரபல பொருளாதார விமர்சகர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் டிவிட் செய்துள்ளார்.

கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைய என்ன காரணம் தெரியுமா..? சந்தை வல்லுனர்கள் சொல்வது என்ன..?!

முதலீட்டாளர்களின் பணம் ரூ.117 கோடி மோசடி: பிரபல நிறுவனத்தின் CFO கைது!

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

சர்வதேச முதலீட்டு சந்தை நிலையாக இருந்த போது பெரும் பகுதி முதலீடுகள் பங்குச் சந்தையிலும், கிரிப்டோவிலும் குவியும் போது கடந்த வருடம் நவம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிட்காயின் விலை 70000 டாலர் வரையில் உயர்ந்தது.

டாலர் ஆதிக்கம்

டாலர் ஆதிக்கம்

ஆனால் அதன் பின்பு சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் டாலர் மதிப்பின் ஆதிக்கம் உயர துவங்கி பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. எலான் மஸ் கூட டாலர் மதிப்பு சரியும் கிரிப்டோ முதலீட்டுப் பாதிப்பை குறைக்க முக்கிய ஹெட்ஜ் ஆக இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

முக்கியக் காரணங்கள்
 

முக்கியக் காரணங்கள்

கிரிப்டோகரன்சி சரிவுக்கு டாலர் ஆதிக்கம் மட்டும் அல்லாமல் அதிகரித்து வரும் ரெசிஷன் அச்சம், வேகமாக உயரும் பணவீக்கம், பணவீக்க உயர்வால் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, இதோடு பங்குச்சந்தை வர்த்தகத்தில் நிலவும் அதிகப்படியான மாற்றம், எஸ் அண்ட் பி 500 குறியீடு தனது உச்ச அளவில் இருந்து 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இழப்பு

இழப்பு

இதனால் பெரும் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு இருந்தாலும், சிறு முதலீட்டாளர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பையும் இழந்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் கிரிப்டோகரன்சி தொடப்பாக இரு பெரிய மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூபிஐ சேவை நிறுத்தம்

யூபிஐ சேவை நிறுத்தம்

இதேவேளையில் டாலர் மதிப்பில் இயங்கும் சில முக்கியமான கிரிப்டோகரன்சிகளின் வீழ்ச்சியும், இந்திய சந்தையில் கிரிப்டோ வர்த்தகத் தளத்தியில் யூபிஐ சேவை நிறுத்தம் ஆகியவை பெரும் பாதிப்பை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

பினான்ஸ்

பினான்ஸ்

இதேபோல் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ வர்த்தகத் தளமான பினான்ஸ் முதலீட்டாளர்களுக்கு சில மணிநேரம் பிட்காயினை விற்பனை செய்ய முடியாத நிலை உருவானது இதனால் பல கோடி முதலீட்டாளர் கிரிப்டோ மீதான நம்பிக்கையை இழந்தனர்.

இன்றைய பிட்காயின் விலை

இன்றைய பிட்காயின் விலை

தற்போதைய சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து கணிக்கும் போது பிட்காயின் 10000 டாலருக்குக் கீழ் சரியவும் வாய்ப்பு இருப்பதாகவும் சில சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இப்போது ஒரு பிட்காயின் விலை 2.83 சதவீதம் சரிந்து 21,092.16 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஜூன் 15ஆம் தேதி ஒரு பிட்காயின் விலை 20,178.38 டாலர் வரையில் சரிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Digital gold AKA Crypto fall 72 percent; Why bitcoin crashing recently

So called digital gold AKA Crypto fall 72 percent; Why bitcoin crashing recently கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. தரையைத் தட்டும் பிட்காயின்..!

Story first published: Friday, June 17, 2022, 15:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.