கோவை மாவட்டம் வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை கக்கன்காலனி பகுதியை சேர்ந்தவர் சூரியன். இவர் நேற்று சாலக்குடி பகுதியிலிருந்து வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்பொழுது வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாலக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்