ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில அமைச்சர் டிஎஸ் சிங் தியோவின் ெபயரில் மோசடி ெசய்த இரண்டு நபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநில சுகாதார துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவரான டிஎஸ் சிங் தியோ, சிவில் லைன்ஸ் போலீசில் அளித்த புகாரில், ‘சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலம் என்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடிகள் நடக்கின்றன. கடந்த சில நாட்களாக வணிக வரித்துறையின் பல்வேறு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களில் குறிப்பிட்ட இரண்டு செல்போன் எண்களின் மூலம் அடையாளம் தெரியாத நபர்களால் போலி செய்திகள் அனுப்பப்படுகின்றன. துறை அதிகாரிகளை ஏமாற்றி அச்சுறுத்தி வருகின்றனர். எனவே இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதையடுத்து சிவில் லைன்ஸ் போலீசார், சம்பந்தப்பட்ட இரண்டு செல்போன் எண்களையும் அடையாளம் கண்டு, இருவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.