புதுச்சேரியில் சாலையில் கிடந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்ஃபோனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்தனர்.
மங்கலம் பகுதியை சேர்ந்த மாரி, ஆதி ஆகிய 2 சிறுவர்கள் உறுவையாறு செல்லும் சாலையில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்ஃபோன் ஒன்று கீழே கிடப்பதை பார்த்துள்ளனர்.
பின்னர் அதனை எடுத்துச்சென்று மங்கலம் காவல்நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.