சிவகங்கையில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த 50 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான மாதவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.