சீனாவின் மாகாணமாக தைவானை குறிப்பிட்ட கத்தார் – உலகக்கோப்பை படிவத்தில் மாற்றம்..!!

தோகா,

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை இந்த ஆண்டு நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு கத்தார் சார்பாக பட்டியலிடப்பட்ட பார்வையாளர்களுக்கான அதிகாரபூர்வ விண்ணப்பப் படிவம் ஒன்றில் “தைவான், சீனாவின் மாகாணம்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு தைவான் அமைச்சகம் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பார்வையாளர்கள் அனைவரும் பெற வேண்டிய அடையாள அட்டை இணையதளத்தில் கீழ்தோன்றும் ஆன்லைன் மெனுவில் ‘தைவான், சீனாவின் மாகாணம்’ என்பதற்குப் பதிலாக ‘தைவான்’ என தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“எங்கள் தேசத்தின் ரசிகர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திருத்தம் செய்வதிலும் விரைவான பதிலளித்ததற்காக நிகழ்வு அமைப்பாளர்களுக்கு நாங்கள் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்,” என்று தைவான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரபு நாடுகளில் முதல் கால்பந்து உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பானில் 2002 இல் நடந்த போட்டியைத் தொடர்ந்து இது ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது போட்டியாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.