Tamil Photo Gallery Of Tamil Serial Roja Team : தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, ராஜேஷ், வடிவுகரசி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தினசரி எபிசோடுகள் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருவதால், டிஆர்பி ரேட்டிங்கிலும் ரோஜா சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது.
சீரியலின் பரபரப்பான எபிசோடுகளுக்கு மட்டுமல்லாது முக்கிய கேரக்டராக அர்ஜூன் ரோஜா இடையே நடைபெறும் ரொமான்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பெரிய குடும்பத்தின் பேத்தி என்று பொய் சொல்லி வீட்டிற்குள் நுழைந்த பெண்னை பின் தொடர்ந்து நகரும்படி கதை அமைக்கப்பட்டு்ள்ளது.
பொதுவாக சீரியல் நடிகைககள் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம்.
இதில் பெரும்பாலும் அவர்கள் தனியாக இருக்கும் புகைப்படங்களே அதிகமாக இருக்கும். ஒரு சில புகைப்படங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கும்படி பதிவிட்டிருப்பார்கள்.
ஆனால் தன்னுடன் நடித்து வரும் சக நடிகர் நடிகைகளுடன் எடுத்துககொண்ட புகைப்படங்கள் நடிகைகள் பெரும்பாலும் தங்களது வலைதள பக்கத்தில் பதிவிடுவதில்லை.
இந்த வகையில் ஒரு சில புகைப்படங்கள் வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் ரோஜா சீரியல் குழுவினர் ஒன்றாக இருக்கும் சிற அறிய புகைப்படங்ள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் ரோஜா சீரியல் நடிகர் நடிகைள் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.