சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டு மொத்தமாக ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் சேமிப்பு தொகை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் மொத்த வைப்பு தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நாடு முழுவதும் 300 புதிய கிளைகள்: பொதுத்துறை வங்கி அறிவிப்பு!
சுவிஸ் வங்கிகள்
இந்த தகவலின்படி கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் ரூபாய் 30,500 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் 10,000 கோடி அதிகம் என்றும் 2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் ரூபாய் 20 ஆயிரத்து 700 கோடி இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50% அதிகம்
அந்தவகையில் ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
4,800 கோடி உயர்வு
மேலும் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு கணக்குகள் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,800 கோடி உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளதும் ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.
மிகப்பெரிய எழுச்சி
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் 6.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என இருந்த நிலையில் 2011, 2013, 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் அதிகரித்து வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு குறைந்தாலும், 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கணக்குகள்
சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள், தனிநபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகள் உள்பட அனைத்து வகையான நிதிகளையும் கணக்கில் கொண்டு தான் இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கருப்புப்பணம்
ஆனால் அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் முழுவதும் கருப்புப்பணம் என்று கருத முடியாது என்றும் வரி மோசடி செய்யும் நபர்களாக அவர்களை கருத முடியாது என்றும் சுவிஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
தகவல் பரிமாற்றம்
இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே வங்கிக்கணக்குகள் குறித்த தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் நடைமுறை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விரிவான தகவல்கள் இந்திய வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் அரசு
ஒவ்வொரு ஆண்டும் இந்த தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதும், நிதி மோசடி செய்பவர்கள் என சந்தேகம் கொள்ளும் இந்தியர்கள் பற்றிய முழு விவரங்களையும் சுவிட்சர்லாந்து அரசு மற்றும் சுவிட்சர்லாந்து வங்கிகள் இந்திய அதிகாரிகளிடம் பகிர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Indians’ funds in Swiss banks jump 50 pc to over Rs 30,000 crores
Indians’ funds in Swiss banks jump 50 pc to over Rs 30,000 crores | சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் இத்தனை ஆயிரம் கோடியா? அதிர்ச்சி தகவல்