சென்னையில் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பு விரைவில் நடைமுறைக்கு வருகிறது! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பு (நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்களை மாற்றும் அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல் கட்டுப்பாட்டுஅமைப்பு, 165சந்திப்புகளில் நிறுவப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு கடந்த 2015ம் ஆண்டு  அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, சென்னையில் 4இடங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம்  சென்னை மாநகராட்சி கருத்து கேட்டிருந்தது. அத்துடன், சென்னைநகரம் முழுவதும் பொதுவாக உள்ள முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வாக, வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி, தனித்தடத்துடன் கூடிய  விரைவு பஸ் போக்குவரத்து அமைப்பு, ஒருங்கிணைந்த பல்நோக்கு போக்குவரத்து அமைப்பு, தெருவிளக்குகள், கழிவுகளை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து, அறிவார்ந்த போக்குவரத்து மேலாண்மை ஆகிய 8 திட்டங்களுக்கும் ஆதரவு கோரப்பட்டது. அதற்காக https;//mygov.in அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு  அமைப்பு (TIMS – Telecommunication Instructional Modeling System)  உதவியுடன் அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி,   நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்களை மாற்றும் அடாப்டிவ் ட்ராஃபிக் சிக்னல் கட்டுப் பாட்டு அமைப்பு சென்னையின் பிரதான 165 சந்திப்புகளில் நிறுவப்படும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி விரைவில் வழங்க உள்ளதாகவும், அதற்காக மூன்று நிறுவனங்கள், ஜூன், 10ல் ஏலம் சமர்ப்பித்து, தொழில்நுட்ப மதிப்பீடு நடந்து வருகிறது, ஓரிரு மாதங்களில் இறுதி செய்யப்படும்,” என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டத்துக்கு (ITS அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பு)  ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் மாநில அரசு இணைந்து நிதியளிக்கும் இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.904.88 கோடி  என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கான “திட்டச் செலவு ஆரம்பத்தில் ரூ. 660 கோடியாக இருந்தது. இருப்பினும், எம்டிசி மற்றும் காவல் துறை உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டம் நடத்திய பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அசல் திட்டத்தில் இல்லாத சில விதிமீறல்கள் தொடர்பான அறிவிப்புகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும்,  வேக வரம்பு மீறல் அமைப்பு மற்றும் சிவப்பு விளக்கு மீறல் கண்டறிதல் போன்ற கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், திட்டச் செலவு அதிகரித்துள்ளது. அதனால், தற்போது திட்டச்செலவு மதிப்பு  ரூ.904.88 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் முக்சிகியமான அமைப்பு,  போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TIMS) மற்றும் நகர பேருந்து அமைப்பு (CBS) ஆகும். TIMSன் கீழ், நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்களை மாற்றும் அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு, சென்னையின் முக்கிய 165 சந்திப்புகளில் நிறுவப்படும்.

தற்போது, சிக்னல்களை மாற்றுவது கைமுறையாக அல்லது நிலையான நேரங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இது ஆட்டோமேடிக்காக செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் முக்கியமான 165 சந்திப்புகளில்  சைன்போர்டுகள், சாலை அடையாளங்கள் மற்றும் பிற சிறிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், விபத்துகள் உட்பட ஏதேனும் அசாதாரண போக்குவரத்து செயல்பாடுகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிப்பதற்காக, 58 இடங்களில் போக்குவரத்து விபத்துக் கண்டறிதல் அமைப்பு நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், 17 இடங்களில் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே பேனல்கள் நிறுவப்பட உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும், இது,  ஓட்டுநர்களுக்கு முன்னால் செல்லும் சாலைகளில் போக்குவரத்தைப் பற்றி தெரிவிக்கவும், அவர்கள் இலக்கை விரைவாக அடைய அவர்கள் எடுக்கக்கூடிய மாற்றுப்பாதையைப் பற்றியும் தெரிவிக்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.

இது தவிர, TIMS ஆனது 115 இடங்களில் தானியங்கி டிராஃப் ஃபிக் கவுண்டர்கள்-கம்-கிளாசிஃபையர் சிஸ்டம் மற்றும் ஒரு ஆய்வுத் தொகுப்பையும் உள்ளடக்கும். இது போக்குவரத்து இயக்கத்தைத் தொடர்ந்து ஆய்வு செய்து, அதற்கேற்ப திட்டங்களைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்படும். இவை அனைத்தும் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் நிர்வகிக்கப்படும்.  பேருந்து அமைப்பு மற்றொரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் கொண்டிருக்கும்.

இது 3,500 பேருந்துகளில் கண்காணிப்பு அமைப்பு, 71 டெர்மினல்களில் பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் 31 டெப்போக்களில் 532 பேருந்து தங்குமிடங்கள் மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும்.

“பேருந்து கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகள் தகவல் அமைப்பு இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் இது பேருந்துகளின் நிகழ்நேர இயக்கத்தை பயணிகள் அறிந்துகொள்ள உதவும்.

டிப்போ மேலாண்மை அமைப்பின் கீழ், MTC அங்கு நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் நிலையைத் தவிர, தங்கள் ஊழியர்களின் செயல்திறனையும் கண்காணிக்க முடியும்.

இவ்வாறு இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பு (நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு) குறித்த முழுமையான தகவல்களை பெற வாசகர்கள் கீழ்க்காணும் இணையதளத்தை நாடலாம்…

https://cscl.co.in/intelligent-traffic-management-system

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.