புதுடில்லி : ‘ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம், 18ல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாநிலங்களில் தேர்தலை நடத்தும் உதவி அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போரின் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில், ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பேனா மற்றும் மை அனுப்பி வைக்கப்படும். மற்ற பேனா மற்றும் மையைப் பயன்படுத்தினால், அந்த ஓட்டுச் சீட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி : ‘ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சிறப்பு பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஊதா நிற மையைப் பயன்படுத்த வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.