2022ம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.3 விகிதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 2021 இல் 7.0 விகிதத்தினாலும் 2020 இல் 2.6 விகிதத்தினாலும் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
ஜூன் 10, 2022 நிலவரப்படி ரூபாவின் பெறுமதி 44.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
யூரோவிற்கு எதிராக ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
2022ம் ஆண்டளவில் யூரோவிற்கு எதிராக ரூபாயின் பெறுமதி 40.7 விகிதத்தினாலும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிரான பெறுமதி 34.8 விகிதத்தினாலும், ஜப்பானிய யெனுக்கு எதிராக 41.1 விகிதத்தினாலும், அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43 விகிதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், இந்த நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு 2.6 சதவிகிதம் மற்றும் 11.4 சதவிகிதம் குறைவடைந்திருந்தது. 2021ல் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 3.8 சதவீதமாக உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.