அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு புதிதாக 5000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடி கட்டிடங்களில் என்கேஜ், யுகேஜி வகுப்புகளை நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க தற்போது பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கான சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென்றும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாநிலம் முழுவதும் 2381 அங்கன்வாடி கட்டிடங்களில் எல்கேஜி, யுகேஜி நடத்துவதற்காக 5000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்டமாக 2500 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யவும், இந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், வருகின்ற விஜயதசமிக்கு முன்னதாக எல்கேஜி யூகேஜி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.