திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்கோட்டையில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி விடுதியில் பசியால் 13 மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.
மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆர்.டி.ஓ சிவக்குமார் இன்று விசாரித்தார். அப்போது விடுதி கேண்டீனில் தினமும் காலை 9.30 மணிக்கே காலை உணவு வழங்கப்படுவதாகவும், ஆனால் 7 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார்.