திருச்சி மாநகரின் முக்கியமான பகுதிகளில், பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூம்;18) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
திருச்சி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன்: 18) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கன்வென்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட்ரோடு, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, வண்ணாரப்பேட்டை, கனராவங்கி காலனி, குமரன் நகர், சீனிவாசநகர், ராமலிங்க நகர், கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான் திருமலை, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணி சாலை, நாச்சியார் கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர் மற்றும் ராம்ஜிநகர் பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை திருச்சி நகரியம் தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.பிரகாசம் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“