திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் கோபாலபுரத்தில் 2 கோயில்களில் கடத்தப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. முத்துமாரியம்மன், ராகவேந்திரா கோயிலில் சிலைகள் மற்றும் 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். போலீசார் தேடி வருவதையறிந்து பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே சிலைகளை போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.