தொழில்முனைவோருக்கான சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு

தொழில்முனைவோருக்கான சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு பட்டறை

கண்டி மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கான வியாபார ஊக்குவிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (17) கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தங்களது தொழில்களை மேம்படுத்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுஇ கண்டி மாவட்ட செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கண்டி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு இணையத்தின் ஊடாக தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் தமக்கு பொருத்தமான வாடிக்கையாளர்களை இனங்கண்டு வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டது.

 

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் திரு.உத்பலா ஜயரத்னஇ கண்டி மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அனோமா பரணதல உட்பட பலர் கலந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.