ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான Gazprom-ன் தலைவர் ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனிக்கு அளிக்க வேண்டிய எரிவாயு அளவை பாதியாக குறைத்துள்ள நிலையில் Gazprom தலைவர், எங்கள் தாயாரிப்பு எங்கள் விதி என காட்டமாக பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், விநியோகங்களைக் குறைத்து விலையை அதிகரிக்க பார்ப்பதாக Gazprom மீது ஜேர்மன் பொருளாதார அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், கனடாவில் இயங்கிவரும் ஜேர்மனி நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய உதிரி பாகங்கள் தாமதமாவதாலையே, எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
ஜேர்மனி மட்டுமின்றி, இத்தாலியும் ஆஸ்திரியாவும் தங்களுக்கான எரிவாயு அளவில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, ஜேர்மனிக்கு ஒரு நாளைக்கு அளிக்க வேண்டிய 70 மில்லியன் கன மீற்றருக்கும் குறைவான எரிவாயு அளவைக் கட்டுப்படுத்திய பிறகு ரஷ்யா தனது சொந்த விதிகளின்படி செயல்படும் என தெரிவித்துள்ளார் Gazprom தலைவர் Alexei Miller.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாகவே கனடாவில் இருந்து உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்,
எரிவாயு விநியோகம் தடைபட இதுவும் முதன்மை காரணம் என Alexei Miller குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இத்தாலிய எரிசக்தி நிறுவனமான எனி Gazprom-ல் இருந்து வியாழன் அன்று கோரப்பட்ட எரிவாயுவில் 65% மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறியது.
மட்டுமின்றி, ரஷ்யா புதிய விதிகளின் படி செய்லபட்டால், மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க தாங்கள் தயாராக இருப்பதாக இத்தாலி பதிலடி அளித்துள்ளது.
தற்போதைய சூழலை தங்களால் சமாளிக்க முடியும் எனவும், இரவும் பகலும் கண்காணித்து வருவதாகவும், ஏற்பட்டுள்ள சேதாரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் இத்தாலிய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.