நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி, இன்று முதல் மூடப்படும்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று (17) நல்லிரவு 12 மணி முதல் மூடப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு நடவக்கைகளுக்காக , இந்த மின் உற்பத்தி நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையின் ‘யூனிட் 2’ பகுதியே இவ்வாறு மூடப்பட உள்ளதாக அவர் கூறினார்.

‘சுமார் இரண்டு வருடங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், கொவிட் நிலைமை காரணமாக சீன நிறுவனத்தால் இலங்கைக்குத் திரும்ப முடியவில்லை. எனவே இரண்டு வருடங்கள் முன்னெடுத்துச் சென்றோம் கட்டாயமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் செப்டம்பர் வரை மட்டுமே எம்மிடம் நிலக்கரி உள்ளது. யுனிட் எண் 2 மற்றும் யுனிட் எண் 3 ஐ 75 நாட்களில் நிறுத்தும் திட்டமும் உள்ளது. அதன் பிறகு சுமார் 45%, நிலக்கரி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வோம். இது சுமார் 30% குறைவடையும். குறைவடைகின்ற 15% ஐ குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை ,நீர் மற்றும் எரிபொருளில் இருந்து எங்களால் உற்பத்தி செய்ய முடியும்.’ எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின் துண்டிப்பில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 3 மணி 20 நிமிடம் மின் துண்டிப்பை முன்னெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் துண்டிப்பில் மாற்றம் ஏற்படாது. திங்கட்கிழமை முதல் மின் துண்டிப்பு நேரம் இதைவிட அதிகரிக்கும். தற்போது எரிபொருள் மற்றும் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை எப்படிப் பெறுகிறோம் என்பதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. இருப்பினும், நாங்கள் தற்போது எங்களால் முடிந்தவரை முயற்சித்து வருகிறோம். எனினும் இலங்கை மின்சார சபை தற்போது 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்த மின் துண்டிப்பு நான்கு பிரதான வலயங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.