ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்க்கும்போது முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் பலரும் ஆர்வத்துடன் தங்கள் ஆளுமையையும் குணநலனையும் தெரிந்துகொள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியவை அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் கண்களையே ஏமாற்றி வர்ணஜாலம் செய்யக்கூடியவை. அப்படி இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கோட்டையின் நடுவில் உள்ள கருப்பு புள்ளியை 40 வினாடிகள் உற்று பார்த்தால் இந்த கோட்டை படம் ஒரு மாயாஜாலத்தைக் காட்டுகிறது.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள மஞ்சனரேஸ் எல் ரியல் கோட்டையின் இந்த புகைப்படத்தின் மையத்தில் உள்ள கருப்பு புள்ளியை சுமார் 40 வினாடிகள் உற்றுப் பாருங்கள். புகைப்படத்தின் ஒரிஜினல் கருப்பு வெள்ளை படம் மீண்டும் தோன்றும். அப்போது உங்கள் மூளையில் சிறிது நேரம் வண்ணங்கள் தோன்றுவதைப் பார்க்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், உங்கள் கண்கள் செயல்படும் விதம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும். ஒரே வண்ணமுடைய புகைப்படத்தில் உங்களுக்கு வண்ணங்களைக் காட்டி மனதைக் கவரும் தந்திரம் இந்த படத்தில் அடங்கியுள்ளது.
இதற்கு முன்னர், நீங்கள் இதுபோன்ற பல வீடியோக்களை பார்த்திருக்கலாம். இந்த கோட்டை படத்தின் மாயாஜாலத்தில் ஏமாற்றப்படுவீர்கள் என்று உறுதியாக நம்புங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் இந்த மாயாஜாலம் எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்.
உண்மையில் அப்படி நடக்கும் எல்லாவற்றுக்கும் உங்கள் கண்களில் உள்ள காட்சிகளை உள்வாங்கும் செல்கள் உணர்திறன் குறைவதற்கான ஒரு படத்தை நீங்கள் நீண்ட நேரம் உற்றுப் பார்க்கும்போது, அதாவது உங்கள் மூளைக்கு தகவல்களைக் கொண்டு செல்லும் ஒளிநிறமிகள் தீர்ந்துவிட்டால், அதற்கு பிறகு அது ஒரு படத்தை உருவாக்குகிறது. இதனால், படம் ஒரே வண்ணத்தில் இருந்தாலும் அதன் ஒரிஜினல் கருப்பு வெள்ளை தோற்றத்தை மூளை உருவாக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“