`பிரதமர் மோடி, அவரின் நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அக்னிபத் திட்டத்தை இளைஞர்கள் நிராகரித்துள்ளனர். வேளாண் சட்டங்களை விவசாயிகள் நிராகரித்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார அறிஞர்கள் மறுத்தார்கள். ஜிஎஸ்டி, வர்த்தகர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
अग्निपथ – नौजवानों ने नकारा
कृषि कानून – किसानों ने नकारा
नोटबंदी – अर्थशास्त्रियों ने नकारा
GST – व्यापारियों ने नकारा
देश की जनता क्या चाहती है, ये बात प्रधानमंत्री नहीं समझते क्यूंकि उन्हें अपने ‘मित्रों’ की आवाज़ के अलावा कुछ सुनाई नहीं देता।
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2022
இந்திய நாட்டின் பிரதமருக்கு, இந்திய மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் அவருடைய நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் அவர் கேட்பதில்லை” என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க… ராஜஸ்தான் முதல்வரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை- காங். கட்சியினர் கண்டனம்
முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள ‘அக்னிபத்’ என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் பெரும் போராட்டங்கள் தொடங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM