புதுடெல்லி,
‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
“கொரோனா பெருந்தொற்று காரணமாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைமுறை 2 ஆண்டுகளாக பாதித்தது. அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி இளைஞர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.அக்னிவீரர்களுக்கான வயது வரம்பை 23 வயதாக உயர்த்தியது அரசின் அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் பெருமளவு இளைஞர்கள் பயன் அடைவார்கள். தேசத்திற்கு சேவை அளிப்பது மற்றும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கி இளைஞர்களால் முன்னேறிச்செல்ல முடியும். இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.