நாம் உடல் ஆரோக்கியத்திற்காக ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வோம். நம்மில் சிலர் துணை நோயால் பாதிக்கப்பட்டிருப்போம். இந்நிலையில் நம்மில் பலர் வெள்ளை சாதத்திற்கு பதில் சப்பாத்தியைத்தான் தேர்வு செய்வோம். நாம் எத்தனைவகையான கோதுமை மாவை வாங்கினாலும் மிரதுவான சப்பாதி வருவது எளிதல்ல. ஆனால் சில டிப்ஸை பின்பற்றினால், நம்மால் மிரதுவான சப்பாத்தி செய்ய முடியும்
ஒரு கப் கோதுமைவுக்கு, ½ கப் தண்ணீர் எடுத்துகொள்ளவும். தற்போது நன்றாக கலந்துவிடவும். தற்போது சீராக பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு பிசைவைதைவிட சப்பாத்தில் பலகை போல நீலமான பலகையில் மாவை போட்டு, நன்கு அழுத்தி பிசையவும். எவ்வளவு அழுத்தமாக பிசைகிறோமோ அவ்வளவு மிரதுவான சப்பாத்தி கிடைக்கும். இதைத்தொடர்ந்து நேரம் இருந்தால் சிறுது நேரம் ஊரவைக்கவும். இதைத்தொடர்ந்து சமமான அளவில் மாவை உருட்டிக்கொள்ளவும்.
தற்போது மாவு உருண்டை ஒன்றை எடுத்து இரண்டாக மடித்து பின்பு மீண்டும் உருண்டையாக உருட்டவும். இந்நிலையில் சப்பாத்தி கட்டையில் வட்டமாக கோதுமை மாவைத் தூவி உருட்டவும். அடிக்கடி மாவை கையால் எடுப்பதை தவிர்க்கவும். தற்போது சப்பாத்தியை சுட்டெடுக்க இரும்புகல்லை பயன்படுத்துவது நல்லது.